சினிமா துளிகள்

ஆந்திராவிலும் அமோக வரவேற்பு! + "||" + Andhra overwhelming welcome!

ஆந்திராவிலும் அமோக வரவேற்பு!

ஆந்திராவிலும் அமோக வரவேற்பு!
தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு நடிக்கும் படத்துக்கு, `அகம் பிரம்மாஸ்மி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
 கதாநாயகன் மனோஜ் மஞ்சுவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். இந்த தகவலை மனோஜ் மஞ்சு உறுதி செய்தார். 

தங்கள் படத்தில் நடிக்க வரும் சமுத்திரக்கனியை வரவேற்பதாகவும், அவருடைய கதாபாத்திரம் இன்னும் சில வருடங்களுக்கு பேசப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சமுத்திரக்கனிக்கு தெலுங்கு பட உலகில் அமோக வரவேற்பு இருந்து வருவதாக பேசப்படுகிறது. அவருக்கு மேலும் சில தெலுங்கு பட வாய்ப்புகளும் வந்துள்ளன. அவற்றில், `பாகுபலி' புகழ் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் `ஆர்.ஆர்.ஆர்.' என்ற தெலுங்கு படமும் ஒன்று. அதில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்!

ஆசிரியரின் தேர்வுகள்...