சினிமா துளிகள்

‘கட்டில்’ படத்தில் வைரமுத்துவின் 41-வது வருட பாடல்! + "||" + Vairamuthu's 41st year song in movie of 'kattil'

‘கட்டில்’ படத்தில் வைரமுத்துவின் 41-வது வருட பாடல்!

‘கட்டில்’ படத்தில் வைரமுத்துவின் 41-வது வருட பாடல்!
கவிஞர் வைரமுத்து திரைப்பட துறைக்கு வந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்து, 41-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்து இருக்கிறார். இன்னும் அவர் முன்னணி பாடல் ஆசிரியராகவே இருந்து வருகிறார்.
 41-ம் வருட தொடக்கத்தில், ‘கட்டில்’ என்ற படத்துக்காக பாடல் எழுதியிருக்கிறார்.

இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, படத்தொகுப்பையும் கவனிக்கிறார், பி.லெனின்.

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் உலக அரங்குக்கு எடுத்து சொல்லும் விதமாக, ‘கட்டில்’ படத்துக்காக தனித்துவமான மொழி நடையில், பாடல் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் உள்பட தமிழகத்தின் சில முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடிகர் களாக களம் இறங்கியிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மது என்பது - அரசுக்கு வரவு; சாவின் ஒத்திகை கவிஞர் வைரமுத்து டுவீட்
தமிழகத்தில் 7-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கு கவிஞர் வைரமுத்துவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.