சினிமா துளிகள்

படம் எப்போது வரும்? + "||" + When will the film arrive?

படம் எப்போது வரும்?

படம் எப்போது வரும்?
தமிழ் சினிமாவின் பிரபல டைரக்டர்களில் ஒருவர், செல்வராகவன். இவர் இயக்கும் படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான், ‘நெஞ்சம் மறப்பதில்லை.’
எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா கசன்ட்ரா, நந்திதா ஸ்வேதா ஆகிய இருவரும் கதாநாயகிகளாகவும் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படம், சில காரணங்களால் திரைக்கு வர முடியாமல் முடங்கி இருக்கிறது. படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ‘‘நெஞ்சம் மறப்பதில்லை படம் எப்போதுதான் திரைக்கு வரும்? கொேரானா பாதிப்பு ஏற்படுவதற்குள் படத்தை பார்க்க வேண்டும்’’ என்று ஒரு ரசிகர் தமாசாக கேட்டு இருக்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் எஸ்.ஜே.சூர்யா, அவர் சிரிப்பது போன்ற படத்தை டுவிட்டரில் போட்டு இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற சினிமா படப்பிடிப்பு
மண்டபம் கடற்கரை பூங்காவில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற சினிமா படப்பிடிப்பு நடந்தது

அதிகம் வாசிக்கப்பட்டவை