மீண்டும் சாதிப்பாரா? 5 புதிய படங்களில், விமல்


மீண்டும் சாதிப்பாரா? 5 புதிய படங்களில், விமல்
x
தினத்தந்தி 24 April 2020 5:54 AM GMT (Updated: 24 April 2020 5:54 AM GMT)

சற்குணம் டைரக்டு செய்த ‘களவாணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விமல்,

சற்குணம் டைரக்டு செய்த ‘களவாணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விமல், அடுத்து ‘வாகை சூடவா’ படத்தில் மீண்டும் டைரக்டர் சற்குணத்துடன் இணைந்தார். இந்தப் படமும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரி கிறார்கள். படத்துக்கு, ‘எங்க பாட்டன் சொத்து’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில், சங்கிலி முருகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக் கிறார்.

இதுதவிர மாதேஷ் டைரக் ஷனில், ‘சண்டக்காரி’ படத்திலும் கதாநாயகனாக விமல் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். படம் முடிவடைந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது.

தொடர்ந்து, ‘மஞ்சள் குடை,’ ‘படவா,’ ‘துடிக்கும் கரங்கள்’ ஆகிய படங்களிலும் விமல் நடிக்க சம்மதித்து இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு அதிக படங்களில் நடித்த கதாநாயகன் என்ற சாதனையை ஏற்படுத்திய விமல், அந்த சாதனையை மீண்டும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

Next Story