சினிமா துளிகள்

4-வது தலைமுறை பாடகி + "||" + 4th generation singer Mathangi Ajithkumar

4-வது தலைமுறை பாடகி

4-வது தலைமுறை பாடகி
ஜேசுதாஸ் என்றாலே அவருடைய வசீகர குரலும், வசியம் செய்யும் பாடல்களும்தான் நினைவுக்கு வரும். அவர் 8 முறை தேசிய விருது பெற்றவர் என்பது தெரிந்த தகவல்.
ஓசையில்லாமல் இன்னொரு சாதனையும் அவரை தேடி வந்து இருக்கிறது. அவருடன், 4-வது தலைமுறையாக ஒரு பாடகி இணைந்து பாடியிருக்கிறார். அவரது பெயர், மாதங்கி அஜித்குமார். இவர், 3 வயதிலேயே எம்.எஸ்.விஸ்வநாதனுடன் மேடை கச்சேரியில் பாடகியாக அறிமுகமானவர்.


இப்போது, ‘கதவு எண் 7, கணேசபுரம்’ என்ற படத்துக்காக, “பனித்துளியே...” என்று தொடங்கும் பாடலை ஜேசுதாசுடன் இணைந்து பாடுகிற அளவுக்கு வளர்ந்து இருக்கிறார்.

இந்த பாடலுக்கு ரவி மேனன் இசையமைத்து இருக்கிறார். பி.ஆர்.கிருஷ்ணா டைரக்டு செய்திருக்கிறார்.