சினிமா துளிகள்

கன்னட படத்தை இயக்குகிறார், விஜய் மில்டன் + "||" + Directed by Kannada film, Vijay Milton

கன்னட படத்தை இயக்குகிறார், விஜய் மில்டன்

கன்னட படத்தை இயக்குகிறார், விஜய் மில்டன்
சமூகத்தில் கவனிக்கப்படாத மனிதர்களை கதாபாத்திரங்களாக்கி வெற்றி பெற்ற டைரக்டர்களில் ஒருவர், விஜய் மில்டன்.
 விஜய் மில்டன் இயக்கிய ‘கோலி சோடா’ படம், இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. அடுத்து இவர் இயக்கிய ‘கடுகு’ படமும் வெற்றி கண்டது. இது, ஒரு சராசரி மனிதன், விஸ்வரூபம் எடுக்கும் கதை.

தமிழ் பட உலகில் தனக்கான ஒரு அடையாளத்தை பெற்றுள்ள விஜய் மில்டன், முதன்முதலாக ஒரு கன்னட படத்தை இயக்குகிறார். அதில், கன்னட திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ சிவராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.


இவருடன் கன்னட பட உலகில் இப்போது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தனஞ்செயா, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம்: விஜய் மில்டன்.