சினிமா துளிகள்

ஸ்ரீதேவியின் 2-வது மகள் கதாநாயகி ஆகிறார் + "||" + Of Sridevi 2nd daughter Is the heroine

ஸ்ரீதேவியின் 2-வது மகள் கதாநாயகி ஆகிறார்

ஸ்ரீதேவியின் 2-வது மகள் கதாநாயகி ஆகிறார்
நடிகை ஸ்ரீதேவி-போனிகபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
 ஸ்ரீதேவி கடந்த 2018-ல் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றபோது நட்சத்திர ஓட்டலில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்தார். போனிகபூர் பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ஏற்கனவே தடக் இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து குஞ்சன் சக்சேனா படத்திலும் கதாநாயகியாக நடித்தார். அடுத்து தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா, குட்லக் ஜெர்ரி ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார். குட்லக் ஜெர்ரி தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷியும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதுகுறித்து போனிகபூர் கூறும்போது ‘குஷி சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்றார். பிரபல இயக்குனர் படத்தில் அவர் நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.