சினிமா துளிகள்

சிவாஜி குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர் + "||" + In the Shivaji family From another actor

சிவாஜி குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர்

சிவாஜி குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர்
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்.
மேடை நாடகங்கள் மூலம் நடிப்பை கற்று, சினிமாவில் நுழைந்து உலக கலைஞர்களுக்கே நடிப்புக்கு உதாரணமாக இருப்பவர், அவர். இன்று வரை நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது அவரை முன்வைத்தே பேசப்படுகிறது.

அவருடைய குடும்பத்தில் இருந்து ஏற்கனவே பிரபு, துஷ்யந்த், விக்ரம் பிரபு ஆகியோர் சினிமாவுக்கு வந்து இருக்கிறார்கள். இந்த நிலையில், சிவாஜி குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகரும் சினிமாவுக்கு வருகிறார். அவருடைய பெயர் தர்சன். இவர், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் ஆவார்.

தர்சன் முறையாக நடிப்பை கற்றவர். நடிப்பதற்காக தன்னை முழுமையாக செதுக்கிக்கொண்டிருக்கிறார். இவர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.