தியேட்டருக்கு பதிலாக டி.வி.யில் வெளியாகும் கதிரின் ‘சர்பத்' படம்


தியேட்டருக்கு பதிலாக டி.வி.யில் வெளியாகும் கதிரின் ‘சர்பத் படம்
x
தினத்தந்தி 18 March 2021 10:18 AM GMT (Updated: 18 March 2021 10:18 AM GMT)

கொரோனாவால் புதிய படங்களை தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்திலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடுகிறார்கள்.

சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெயம் ரவியின் பூமி, விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், மாதவனின் சைலன்ஸ், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின் உள்ளிட்ட படங்கள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி. தளங்களில் வெளிவந்தன. பத்ரி இயக்கத்தில் பிரசன்னா, அஸ்வின் ஆகியோர் நடித்துள்ள நாங்க ரொம்ப பிஸி படம் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. தொடர்ந்து ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஏலே படமும் திரையரங்கில் வெளியாகாமல் டி.வி.யில் ஒளிபரப்பானது. இந்த வரிசையில் அடுத்து சர்பத் படமும் தொலைக்காட்சியில் வெளியாகிறது. இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்து பிரபலமானவர். சூரி, ரகசியா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர். ஓ.டி.டி. தளத்திலும் சர்பத் படத்தை வெளியிடுகிறார்கள்.

Next Story