சினிமா துளிகள்

பிரசாந்தின் புதிய படத்தில் சிம்ரன் வில்லி ஆனார் + "||" + Simran became Villie role in Prashand's new film

பிரசாந்தின் புதிய படத்தில் சிம்ரன் வில்லி ஆனார்

பிரசாந்தின் புதிய படத்தில் சிம்ரன் வில்லி ஆனார்
பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தை முதலில் மோகன்ராஜா டைரக்டு செய்வதாக இருந்தது. இப்போது அவர் ஒரு தெலுங்கு படத்தை டைரக்டு செய்வதால், பிரசாந்த் படத்தை இயக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
அவருக்கு பதில், ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய பிரடரிக் டைரக்டு செய்வார் என்று கூறப்பட்டது. இப்போது அவரும் படத்தில் இல்லை. ‘அந்தகன்’ படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜனே டைரக்டு செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் படத்தில், சிம்ரன் வில்லியாக நடிக்கிறார். கார்த்திக், கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள். பிரசாந்த் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி முடிவாகவில்லை. படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.