திருமணமான ஒரு மாதத்தில் நடிகை தற்கொலை முயற்சி


கன்னட நடிகை சைத்ரா
x
கன்னட நடிகை சைத்ரா
தினத்தந்தி 10 April 2021 12:04 PM IST (Updated: 10 April 2021 12:04 PM IST)
t-max-icont-min-icon

கன்னட நடிகை சைத்ரா. இவர் கன்னட பிக்பாஸ் 7-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார்.

சைத்ராவுக்கும், நாகார்ஜுனன் என்ற தொழில் அதிபருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இருவரும் சில வருடங்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சைத்ரா பெங்களூருவில் உள்ள வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். நடிகை சைத்ராவுக்கும், நாகார்ஜுனனுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும், இதனாலேயே சைத்ரா மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சைத்ராவை மிரட்டி நாகார்ஜுனன் திருமணம் செய்து கொண்டார் என்றும், திருமணத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து வாழவில்லை என்றும் சைத்ரா குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள். திருமணமான ஒரு மாதத்தில் நடிகை தற்கொலைக்கு முயன்றது கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story