ஷில்பா ஷெட்டி கணவர் என்னை ஆபாச படத்தில் நடிக்க தூண்டினார்: ஷெர்லின் சோப்ரா


ஷில்பா ஷெட்டி கணவர் என்னை ஆபாச படத்தில் நடிக்க தூண்டினார்: ஷெர்லின் சோப்ரா
x
தினத்தந்தி 10 Aug 2021 8:53 AM GMT (Updated: 2021-08-10T14:23:22+05:30)

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்த புகாரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி உள்ளார். தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு ஆபாச பட விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர்.

இந்த நிலையில் ஷெர்லின் சோப்ரா அளித்துள்ள பேட்டியில், “நான் கவர்ச்சி நடிகையாக மாறுவதற்கு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராதான் காரணம். நான் தவறான திசைக்கு செல்ல வழிகாட்டிய குருநாதர் அவர்தான். நிர்வாணம், ஆபாசம் சாதாரணமானது என்று சொல்லி என்னை நம்ப வைத்தார். எல்லோரும் அப்படி நடிக்கிறார்கள். நானும் நடிக்க வேண்டும் என்றார்.

ஆரம்பத்தில் கவர்ச்சி வீடியோக்களுடன் தொடங்கி இறுதியில் ஆபாச வீடியோக்கள் எடுத்தார். எனது மனைவிக்கு உங்களின் கவர்ச்சி வீடியோக்கள் அதிகம் பிடித்துள்ளது. அவர் உங்களை பாராட்டினார் என்றார். பெரிய நடிகையான ஷில்பா ஷெட்டி பாராட்டியதால் எது சரி, எது தவறு என்று புரியாமல் சிக்கி கொண்டேன்’’ என்று கூறினார்.

Next Story