திருப்பதி கோவிலில் ஸ்ரேயா சாமி தரிசனம்


திருப்பதி கோவிலில் ஸ்ரேயா சாமி தரிசனம்
x
தினத்தந்தி 16 Sep 2021 8:42 AM GMT (Updated: 16 Sep 2021 8:42 AM GMT)

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக மழை படத்தில் நடித்து பிரபலமான ஸ்ரேயா, சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி, விஷாலுடன் தோரணை, தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018-ல் ரஷிய தொழில் அதிபர் ஆண்ட்ரூ கோச்சேவை ஸ்ரேயா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு கணவருடன் பார்சிலோனியாவில் குடியேறி உள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரேயா கணவருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

Next Story