சினிமா துளிகள்

‘அரண்மனை 3’ பட ஷூட்டிங்கின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் + "||" + Interesting incident that happened during the shooting of ‘Palace 3’ movie

‘அரண்மனை 3’ பட ஷூட்டிங்கின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம்

‘அரண்மனை 3’ பட ஷூட்டிங்கின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம்
சுந்தர்.சி இயக்கி உள்ள ‘அரண்மனை 3’ திரைப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால், விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்நிலையில், அரண்மனை 3 படக்குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் படப்பிடிப்பு அனுபவங்கள் எப்படி இருந்தது என்பது குறித்து கேட்டோம். அவர் கூறிய விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தியது. ‘அரண்மனை 3’ படத்திற்காக 12 அடி உயர லிங்கம் சிலை ஒன்றை செட் போட்டு படமாக்கி உள்ளனர்.

ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டை உண்மையான லிங்கம் சிலை என்று நினைத்து பொதுமக்கள் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்தார்களாம். இதன் காரணமாக சில நாட்கள் ஷூட்டிங்கைத் தொடங்குவதில் தாமதம் ஆனதாம். முன்னதாக ‘அரண்மனை 2’ படத்தின் ஷூட்டிங்கின்போதும், அப்படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட அம்மன் சிலை செட் முன்பு, இதேபோல பொதுமக்கள் திரண்டு பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அதிரடி திருப்பங்களுடன் உண்மை சம்பவம் படமாகிறது
‘காத்தவராயன்’, ‘இ.பி.கோ 302’ ஆகிய படங்களை இயக்கிய சலங்கை துரை, ‘கடத்தல்’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார்.
2. கூவத்தில் குதித்து தப்பி ஓடிய கொள்ளையர்களை விரட்டி பிடித்த போலீசார் சென்னையில் பரபரப்பு சம்பவம்
சென்னையில் கூவத்தில் குதித்து தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.
3. வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதான 3-வது முக்கிய குற்றவாளி சென்னை அழைத்து வரப்பட்டார்
வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட 3-வது முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை அழைத்து வரப்பட்டார்.
4. வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதான 3-வது முக்கிய குற்றவாளி சென்னை அழைத்து வரப்பட்டார்
வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட 3-வது முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை அழைத்து வரப்பட்டார்.
5. இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம்: தமிழகத்தை உலுக்கிய தந்தை-மகன் கொலை சம்பவம்
தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.