பிக்பாஸ் பிரபலத்துடன் இணையும் அதுல்யா ரவி


பிக்பாஸ் பிரபலத்துடன் இணையும் அதுல்யா ரவி
x
தினத்தந்தி 14 Dec 2021 5:27 PM GMT (Updated: 2021-12-14T22:57:14+05:30)

சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்த அதுல்யா ரவி, அடுத்ததாக பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவர் நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், தாரள பிரபு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்க இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க இருக்கிறார். இவர்கள் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது.

இந்த படத்தின் பூஜையில் இயக்குநர் சேரன், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்தினர்.

Next Story