அழகிக்கு வயது 20... நெகிழும் தங்கர் பச்சான்


அழகிக்கு வயது 20... நெகிழும் தங்கர் பச்சான்
x
தினத்தந்தி 7 Jan 2022 11:14 PM IST (Updated: 7 Jan 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

பார்த்திபன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அழகி படத்தை பற்றி இயக்குனர் தங்கர் பச்சான் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப்படம் “அழகி”. இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், அழகி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. அதுமட்டும் இல்லாமல் சிறந்த திரைப் படத்திற்கான பல விருதுகளையும் குவித்தது.

இப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், இயக்குனர் தங்கர் பச்சான், தனது சமூக வலைத்தள பக்கத்தில், தங்கரின் அழகிக்கு வயது 20. 20வது ஆண்டுகள் உருண்டோடியதை நம்பமுடியவில்லை. அழகியின் தாக்கத்தை, நினைவுகளை யாரேனும் நாளும் பகிர்கின்றனர். திரைப்பட வணிகர்களின் புறக்கணிப்பால் ஏற்பட்ட வலிகள், அவமானங்கள் உயிர்விடும் வரை மறக்கயியலாது. திரைப்பட வரலாற்றில் அழகி பேசுபொருளானது மக்களால்தான்’ என்று நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கிறார்.
1 More update

Next Story