புனித் ராஜ்குமாரின் ஆசையை நிறைவேற்றும் குடும்பத்தினர்.


புனித் ராஜ்குமாரின் ஆசையை நிறைவேற்றும் குடும்பத்தினர்.
x
தினத்தந்தி 11 Jan 2022 5:28 PM GMT (Updated: 2022-01-11T22:58:33+05:30)

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசையை அவருடைய குடும்பத்தினர் நிறைவேற்ற முன் எடுத்துள்ளனர்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலை பெங்களூருவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அவரது உடலை அவருடைய ரசிகர்கள் பலரும் பார்வையிட்டு மரியாதை செய்து வருகின்றனர். அவர் நடிப்பதையும் தாண்டி சமூக செயல்களையும் செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வந்திருந்தார்.

நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவருடைய குடும்பத்தினர் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரது அப்பா ராஜ்குமார் பிறந்த ஊரான காஜனூர் கிராமத்திலுள்ள பழங்கால வீட்டிற்குச் சென்று பார்வையிட்டு வந்திருக்கிறார்.

அந்த இடத்தில் ராஜ்குமாருக்கு நினைவு இல்லம் கட்டவும், ராஜ்குமார் பற்றிய அருங்காட்சியகம் வைக்கவும் திட்டமிட்டிருக்கிறார். பழைய வீட்டின் தூண்கள், ஓடுகள் அனைத்தையும் அப்படியே வைத்து விட்டு புதிய வீட்டை உருவாக்கி அங்குக் கல்வி பணிகளையும் நடத்த ஆசைப்பட்டிருக்கிறார். இப்போது அவர் ஆசையை அவரது அண்ணன் சிவராஜ் குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் கையிலெடுத்திருக்கிறார்கள். வீடு புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

Next Story