சினிமா துளிகள்

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்கே20 படத்தின் இசையமைப்பாளர் + "||" + Composer of the SK20 film Recovered from Corona

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்கே20 படத்தின் இசையமைப்பாளர்

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்கே20 படத்தின் இசையமைப்பாளர்
தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு பணியாற்றியவரும் நடிகர் சிவகார்திகேயன் நடிக்கும் எஸ்கே20 படத்தின் இசையமைப்பாளருமான முன்னணி இசையமைப்பாளர் கொரோனாவில் இருந்து மீண்டுவந்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.


கடந்த 7-ஆம் தேதி இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், கோவிட் 19 நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது, உடல் நலம் தேறி வருகிறேன். இந்த மோசமான காலகட்டத்தில் எனக்காகப் பிரார்த்தனை செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி… தொடர்ந்து என்னை நல்லபடியாக கவனித்துக் கொண்ட மருத்துவர்களுக்கும், குழந்தை போல் பார்த்துக் கொண்ட எனது குழுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தயவு செய்து அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுங்கள், கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள், முக கவசம் அணிந்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள். என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு
மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த படத்தின் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
2. விஜய் சேதுபதி வெளியிட்ட சமுத்திரக்கனி படத்தின் போஸ்டர்
இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியின் ரைட்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருடைய அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
3. இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா தொற்று உறுதி..!
இசையமைப்பாளர் தமன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
4. அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பா.இரஞ்சித்
இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கி வரும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
5. நாய் சேகர் படத்தின் டீசர்
கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ், பவித்ரா லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் நாய் சேகர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.