கருணாஸ் நடிக்கும் ஆதார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு


கருணாஸ் நடிக்கும் ஆதார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
x
தினத்தந்தி 15 Jan 2022 12:49 AM IST (Updated: 15 Jan 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதார்' படத்தின் பர்ஸ்ட் லுக் தமிழர் திருநாளான பொங்கலன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா. உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். பாடல்களை கவிஞர் யுரேகா எழுத, 'அசுரன்' புகழ் ராமர் படத்தை தொகுத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநரான சீனு படத்தின் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். 'ஆதார்' படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

'ஆதார்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பொங்கல் திருநாளான இன்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் கருணாஸின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருவதால் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
1 More update

Next Story