பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை - ஆரி உருக்கம்


பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை - ஆரி உருக்கம்
x
தினத்தந்தி 17 Jan 2022 4:39 PM GMT (Updated: 2022-01-17T22:09:40+05:30)

தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் டைட்டிலை வழங்க கடந்த சீசனின் வெற்றியாளரை அழைக்கவில்லை என்று சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. கடைசி நாள் நிகழ்ச்சியில் பல நபர்கள் கலந்து கொண்டு அந்த மேடையை சிறப்பிப்பார்கள். அதன்படி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். கடந்த சீசனில் டைட்டிலை தட்டிச் சென்ற போட்டியாளரை அழைத்து தற்போது நடந்து கொண்டிருக்கும் சீசனின் வெற்றியாளருக்கு அவர் கையால் அந்த பட்டத்தை வழங்குவது வழக்கம்.

அதன்படி கடந்த சீசனின் வெற்றியாளர் ஆரியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு ஆரியை அழைக்கவிலை என்று அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

அதில், இந்த பிக்பாஸ் இறுதிப்போட்டியில் கோப்பையை அளிக்க நான் வருவேன் என்று எனக்காக நீங்கள் காத்துக் கொண்டிருப்பீர்கள் என எனக்கு தெரியும். உங்களையும் கமல் சாரையும் மீண்டும் சந்திக்க ஆவலாக இருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. என அந்த பதிவில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

Next Story