சினிமா துளிகள்

5-வது கணவரையும் விவாகரத்து செய்த ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் + "||" + 'Baywatch’ star Pamela Anderson files for divorce from her fifth husband Dan Hayhurst

5-வது கணவரையும் விவாகரத்து செய்த ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன்

5-வது கணவரையும் விவாகரத்து செய்த ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன்
பிரபல ஹாலிவுட் நடிகையும், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளருமான பமீலா ஆண்டர்சன், தனது 5வது கணவரை விவாகரத்து செய்திருக்கிறார்.
பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சனுக்கு 54 வயது ஆகிறது. இவர் பே வாட்ச் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 

2010-ல் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இசைக்கலைஞர் டோமி லீ என்பவரை பமீலா 1995-ல் காதலித்து திருமணம் செய்து 3 ஆண்டு களுக்கு பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார். 2006-ல் கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தார். 2007-ல் ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை மணந்த திருமணமும் நிலைக்கவில்லை. அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்தார். ஆனால் 2014-ல் மீண்டும் ரிக் சாலமனை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்துக்கு பிறகு ரிக்கை 2-வது தடவையாக விவாகரத்து செய்தார். 2020-ல் ஹாலிவுட் தயாரிப்பாளரும் சிகை அலங்கார நிபுணருமான ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்து 12 நாட்களில் விவாகரத்து பெற்றார். பின்னர் தனது பாதுகாவலர் டேன் ஹேஹர்ஸ்ட்டை காதலித்து வான்கூவர் தீவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இப்போது டேன் ஹேஹர்ஸ்டையும் விவாகரத்து செய்துள்ளார்.