மின்னல் முரளியை தொடர்ந்து மீண்டும் குரு சோமசுந்தரம்

ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பல படங்களில் நடித்த குருசோமசுந்தரம், மின்னல் முரளி படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாக களம் இறங்கியிருக்கிறார்.
2011-இல் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் அறிமுகமாவர் நடிகர் குரு சோமசுந்தரம். பிறகு பல படங்களில் நடித்திருந்தார், குறிப்பாக இவர் கதாநாயகனாக நடித்த ஜோக்கர் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஜெய்பீம் படத்திலும் நடித்திருந்தார்.
டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த மின்னல் முரளி படத்தில் சிபுவாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இவர் தற்போது பெல் என்கிற படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். புரோகன் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தை ஆர்.வெங்கட் இயக்குகிறார். இப்படத்தில் நிதிஷ் வீரா மற்றும் ஸ்ரீதர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கதை வசனம் வெயிலோன் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பரணிகண்ணன், ராபர்ட் இசையமைத்து பீட்டர் சக்ரவர்த்தி பாடல் எழுதியிருக்கிறார்.
இப்படம் விரைவில் திரைக்குவரவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story