உள்ளம் சேர்ந்தா எல்லாம் மாறும் -ட்ரெண்டாகும் மாமன்னன் இரண்டாவது பாடல்


உள்ளம் சேர்ந்தா எல்லாம் மாறும் -ட்ரெண்டாகும் மாமன்னன் இரண்டாவது பாடல்
x

மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கினர்.

இதையடுத்து 'மாமன்னன்' படத்தின் அடுத்த பாடலான 'ஜிகு ஜிகு ரெயில்' லிரிக் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடல் 'புழு துளையிட்ட பழத்தின் விதையாக குளிர்ந்த சூரியனை நோக்கியே நடந்துபோகிறேன்' என்ற வரிகளுடன் தற்போது வெளியாகியுள்ளது. யுகபாரதி வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும், இந்த வீடியோவில் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story