பேத்தியின் ஆசையை நிறைவேற்றிய ராதாரவி


பேத்தியின் ஆசையை நிறைவேற்றிய ராதாரவி
x

ராதாரவி புதிய வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படங்களின் மூலம் ராதாரவி தனது பேத்தியின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான மன்மத லீலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராதாரவி. கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்டிஸ் என பன்முகத்தன்மை கொண்ட ராதாரவி தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 500 படங்களுக்கு மேல் ராதாரவி பிசியாக நடித்து வருகிறார்.

ராதாரவி புதிய வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. கோட் சூட் அணிந்து வில்லன் போன்று காட்சியளிக்கும் ராதாரவியின் புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

இந்த புகைப்படங்களின் மூலம் தனது பேத்தியின் ஆசையை ராதாரவி நிறைவேற்றியுள்ளார். திரைத்துறையில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வரும் பவித்ரா சதீஷ், நீண்ட நாள் ஆசையான தனது தாத்தா ராதாரவிக்கு ஆடை வடிவமைத்துள்ளார். தனது பேத்தியின் ஆசைக்காக மறுப்பு தெரிவிக்காமல் பவித்ரா சதீஷ் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களே தற்போது இணையத்தில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.


Next Story