விமர்சனம்
அண்ணா துரை

அண்ணா துரை
விஜய் ஆண்டனி டயனா சாம்பிகா, மகிமா, ஜூவல் மேரி ஸ்ரீனிவாசன் விஜய் ஆண்டனி தில்ரா
விஜய் ஆண்டனி, அண்ணா துரை சினிமா விமர்சனம்.
Chennai
விஜய் ஆண்டனி, காதலி விபத்தில் இறந்ததால் மனம் உடைந்து குடிக்கு அடிமையாகிறார். அவரது தம்பி பள்ளியில் உடற்பயிற்சி ஆசியராக வேலை செய்கிறார். நண்பனுக்கு பிரியாணி கடை வைப்பதற்காக கந்து வட்டி தாதா சேரன்ராஜிடம் கடன் வாங்கி கொடுத்து அதற்காக வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்கிறார் விஜய் ஆண்டனி.

நண்பனால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் போகிறது. தாதா மிரட்டுகிறார். விஜய் ஆண்டனி, தம்பியின் மாமனாரிடம் பணம் வாங்கி கடனை கட்டுகிறார். கடன் பத்திரத்தை திருப்பி வாங்காமல் மறந்து வந்து விடுகிறார். அழகு நிலையம் நடத்தும் ஜூவல் மேரிக்கு விஜய் ஆண்டனி மீது காதல் மலர்கிறது.

அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவோடு குடிப் பழக்கத்தை விட்டு விட முடிவு எடுக்கிறார் விஜய் ஆண்டனி. அப்போது கொலைப்பழியில் சிக்கி சிறைக்கு செல்ல நேர்கிறது. 7 வருடங்களுக்கு பிறகு விடுதலையாகி ஊருக்கு வரும்போது தனது தம்பி பெரிய தாதாவாக மாறி தனது கண் எதிரிலேயே ஒருவரை வெட்டி கொல்வதை பார்த்து அதிர்கிறார். சிறையில் இருந்தபோது குடும்பத்தில் என்ன நடந்தது.? தம்பியின் நல்வாழ்வுக்காக என்ன முடிவு எடுத்தார்? என்பது மீதி கதை.

அண்ணன், தம்பியாக இரு வேடங்களில் வருகிறார் விஜய் ஆண்டனி. முந்தைய படங்களில் இருந்து நடிப்பில் மேலும் தேறி இருக்கிறார். அண்ணாதுரையாக வரும் அண்ணன் கதாபாத்திரத்தில் தாடி வளர்த்து காதலி இறந்த சோகத்தை காட்டுகிறார். மயானத்தில் இளம்பெண்ணை சீரழிக்கும் ரவுடிகளை ஆவேசமாக பாய்ந்து தாக்குவது, நண்பனுக்கு உதவுவது, தாதா அபகரித்த தனது சொந்த கடையை மீட்டு தந்தையிடம் வழங்குவது, தனது அஜாக்கிரதையால் இறந்து போனவர் குடும்பத்துக்கு சொத்து எழுதி வைப்பது என்று படம் முழுக்க விஜய் ஆண்டனிக்கு நிறைய வேலைகள்.

தம்பியாக வரும் விஜய் ஆண்டனி, தம்பிதுரை காதாபாத்திரத்தில் ரவுடிகளுடன் மோதி ஆக்ரோ‌ஷம் காட்டுகிறார். ஜுவல் மேரி, மகிமா, டயானா சாம்பிகா ஆகிய மூவரும் காதலிகளாக வருகிறார்கள். ராதாரவி, சேரன்ராஜ், உதய்ராஜ் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். அன்பான மாமனாராக வரும் செந்தில் குமரன் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் இடையில் சிக்கி தவிக்கும் அவஸ்தைகளை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி நெகிழ வைக்கிறார்.

திரைக்கதையை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். குடும்ப உறவுகள், காதல், அதிரடி என்று காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார், இயக்குனர் சீனிவாசன். தில்ராஜ் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனி பின்னணி இசையும் படத்தோடு ஒன்ற வைக்கின்றன.

முன்னோட்டம்

பிகில்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படம் தீபாவளிக்கு முன்பே ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: அக்டோபர் 25, 06:08 AM

கைதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 25, 06:06 AM

அசுரன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’அசுரன்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 04, 10:21 PM
மேலும் முன்னோட்டம்