விமர்சனம்
ரிச்சி

ரிச்சி
நிவின்பாலி, நட்ராஜ் சுப்பிரமணியம் ஷ்ரதா ஸ்ரீநாத், லட்சுமி பிரியா கவுதம் ராமச்சந்திரன் பி.அஜனீஸ் லோக்நாத் பாண்டி குமார்
"நிவின் பாலி" நடித்த ரிச்சி என்ற படத்தின் சினிமா விமர்சனம்.
Chennai
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் சில கொலைகள். ரவுடிகள் மோதல் என்று சாதாரணமாக அந்த வழக்கை முடிக்கின்றனர். ஆனால் அதன் பின்னணியில் மர்மங்கள் இருப்பதாக பெண் பத்திரிகையாளர் ஸ்ரத்தா புலனாய்வு செய்ய, அவரது விசாரணையில் கதை விரிகிறது.

நிவின் பாலியும், ராஜ்பரத்தும் சிறு வயது நண்பர்கள். பள்ளியில் அவர்கள் படிக்கும்போது சக மாணவர்களுடன் மோதல் ஏற்பட்டு ஒருவன் பலியாகிறான். ராஜ்பரத் கொல்கத்தாவுக்கு தப்பி ஓடி வளர்ந்து அங்குள்ள கடத்தல் கும்பலில் சேர்கிறார். நிவின் பாலி ஜெயிலில் தண்டனை பெற்று விடுதலையாகி உள்ளூர் தாதாவிடம் அடியாள் வேலை பார்க்கிறார். அதே ஊரில் வெளியூரில் இருந்து வந்து வேலை பார்க்கும் நட்ராஜும் வசிக்கிறார்.

நட்ராஜும், குமாரவேலும் நண்பர்களாகிறார்கள். குமாரவேலுவின் தங்கையை நட்ராஜ் காதலிக்கிறார். கொல்கத்தாவில் இருக்கும் ராஜ்பரத் தாயை பார்ப்பதற்காக ஊருக்கு வருகிறார். கொலை சம்பவத்தில் தன்னை போலீசில் சிக்க வைத்துவிட்டதாக ராஜ்பரத் மீது கோபமாக இருக்கும் நிவின்பாலி அவரை பழிவாங்கத் துடிக்கிறார். குமாரவேலை அடித்து கொன்றுவிட்டதாக நிவின் பாலி மீது சந்தேகித்து நட்ராஜ் அவரை தேடி அலைகிறார். மூவரின் நிலைமை என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.

நிவின் பாலி துப்பாக்கி பெல்டை இடுப்பில் சுற்றி வெற்றிலை போட்டுக்கொண்டு எதிரிகளை நையப்புடைக்கும் ரவுடி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். நண்பனை துப்பாக்கி முனையில் மிரட்டி கோபக்காரனாக மாறிய காரணம் சொல்லும்போது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

ராஜ் பரத் ரவுடி வாழ்க்கையில் இருந்து விடுபட முடியாத தவிப்புகளையும் துப்பாக்கி முனையில் மிரட்டும் நிவின் பாலியிடம் தன்னை விட்டு விடும்படி கெஞ்சும் உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். முடிவு பரிதாபம். படகு மெக்கானிக்காக வரும் நட்ராஜ் யதார்த்தமான நடிப்பில் கவர்கிறார். லட்சுமி பிரியாவிடம் காதலை சொல்லத் துடிக்கும் தவிப்பை இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

பாதிரியாராக வரும் பிரகாஷ்ராஜ் அமைதியான நடிப்பால் கவர்கிறார். ஸ்ரத்தா வந்து போகிறார். குமாரவேல், லட்சுமி பிரியா, துளசி ஆகியோரும் உள்ளனர். திரைக்கதை வலுவின்றி நகர்கிறது. கொலைகள் பின்னணியை அறியும் கதையம்சத்தில் காட்சிகளை சஸ்பென்ஸ் ஆக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன். அஜனீஸ் லோக்நாத் பின்னணி இசையும், பாண்டிகுமார் ஒளிப்பதிவும் பலம்.

முன்னோட்டம்

பிகில்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படம் தீபாவளிக்கு முன்பே ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: அக்டோபர் 25, 06:08 AM

கைதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 25, 06:06 AM

அசுரன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’அசுரன்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 04, 10:21 PM
மேலும் முன்னோட்டம்