விமர்சனம்
ஆண், பெண் நட்பு சம்பந்தமான கதை - பிரண்ட்ஷிப் படவிமர்சனம்

ஆண், பெண் நட்பு சம்பந்தமான கதை - பிரண்ட்ஷிப் படவிமர்சனம்
ஹர்பஜன் சிங் லாஸ்லியா ஜே.பி.ஆர் - ஷாம் சூர்யா உதயகுமார் சாந்த குமார்
மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் 4 நண்பர்களை சுற்றி நடக்கும் கதை பிரண்ட்ஷிப். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்த முதல் படம்.
Chennai
மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் 4 நண்பர்களை சுற்றி கதை பின்னப்பட்டு இருக்கிறது. அந்த நண்பர்களில் ஒருவர் (லாஸ்லியா) மட்டும் பெண். பொதுவாக பெண்கள் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பதில்லை. லாஸ்லியா வித்தியாசமானவர் என்பதையும், ஆண் நண்பர்களுடன் விரசமின்றி பழக முடியும் என்பதையும் நிரூபிக்கிறார்.

இந்த நிலையில் அவர் இரவு நேரத்தில் நண்பர்களுக்காக காத்திருக்கும்போது, அவரை வில்லன் ஜெ.எஸ்.கே.சதீஷ்குமார் கடத்தி செல்கிறார். அவரும், அவருடைய நண்பர்களும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்கிறார்கள். இவர்கள் செய்த குற்றத்தை லாஸ்லியாவின் நண்பர்கள் மீது சுமத்தி, கற்பழிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.

அந்த சதியை வக்கீல் அர்ஜூன் எப்படி முறியடித்து அப்பாவி நண்பர்களை காப்பாற்றுகிறார்? என்பது உச்சக்கட்ட காட்சி.

படத்தில் அர்ஜூன் கதாபாத்திரம், எதிர்பாராத திருப்பம். அவருடைய திடீர் பிரவேசம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. கோர்ட்டில் ஆக்ரோசம் காட்டாமல் அழுத்தம் திருத்தமாக வாதாடும் பாணி, கைதட்ட வைக்கிறது.

ஹர்பஜன்சிங்கிடம் நிறைய எதிர்பார்த்தால், ஏமாற்றம். சதீஷ் வழக்கமான பாணியில் சிரிக்க வைக்கிறார். லாஸ்லியா கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு நடித்து இருக்கிறார். ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், மிரட்டலான வில்லன்.

உதயகுமார் இசையில் தேவா பாடிய “அடிச்சி பறக்கவிடும்மா...” பாடல் வரும்போது, தியேட்டரில் உற்சாகம். ஜே.பி.ஆர், சாம்சூர்யா டைரக்டு செய்து இருக்கிறார்கள். 4 இளைஞர்களும், ஒரு பெண்ணும் என்ற கரு, புதுசு அல்ல. ‘புதுவசந்தம்’ படத்தில் பார்த்து ரசித்ததுதான். சுவாரஸ்யமான காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் ரசிக்க வைக்கிறது.

முன்னோட்டம்

நதி

அறிமுக இயக்குனர் தாமரைச் செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘நதி’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 01, 07:54 PM

யானை

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 01, 05:06 PM

ருத்ர தாண்டவம்

மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, ராதா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ருத்ர தாண்டவம் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: செப்டம்பர் 30, 08:05 PM
மேலும் முன்னோட்டம்