மாவட்ட செய்திகள்

மகன் கண் எதிரே பரிதாபம் சாலை விபத்தில் பெண் பலி + "||" + Son in front of the eye Road accident The girl is dead

மகன் கண் எதிரே பரிதாபம் சாலை விபத்தில் பெண் பலி

மகன் கண் எதிரே பரிதாபம் சாலை விபத்தில் பெண் பலி
மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண், வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் சந்திரா (வயது 55). இவருடைய மகன் மோகன்ராஜ் (27). சம்பவத்தன்று மோகன்ராஜ், தனது தாய் சந்திராவை மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கோயம்பேடில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

வேளச்சேரி பிரதான சாலை அருகே உள்ள இணைப்பு சாலையில் சென்றபோது, அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியது. இதில் நிலைதடுமாறியமோகன் ராஜ், சந்திரா இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

இதில் சந்திரா, பின்புறமாக விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே மகன் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். மோகன்ராஜ் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான சந்திரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காமநாயக்கன்பாளையம் அருகே கார்கள் மோதல்; பெண் பலி
காமநாயக்கன்பாளையம் அருகே கார்கள் மோதி கொண்டன. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 8 பேர் காயம் அடைந்தனர்.
2. மேல்மலையனூர் அருகே, ஆட்டோ மீது கல்லூரி பஸ் மோதல்- பெண் பணியாளர் பலி
மேல்மலையனூர் அருகே ஆட்டோ மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் அங்காளம்மன் கோவில் பெண் பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3. ஓசூர் அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி
ஓசூர் அருகே இரும்பு கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
4. கோத்தகிரி அருகே, பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி
கோத்தகிரி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியானார்.
5. சூளகிரி அருகே, மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி - கிராம மக்கள் பீதி
சூளகிரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானார். இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.