மாவட்ட செய்திகள்

கோவை, நீலகிரியில் பரவலாக மழை - குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு + "||" + Heavy rains in Nilgiris, Increased water supply to ponds

கோவை, நீலகிரியில் பரவலாக மழை - குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கோவை, நீலகிரியில் பரவலாக மழை - குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கோவை, நீலகிரியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் குளங்களுக்குநீர்வரத்துஅதிகரித்துள்ளது.
கோவை,

கோவையில்வடகிழக்கு பருவமழைதொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கடந்த சிலநாட்களாகபகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில்நேற்றுக்காலைமுதல் மதியம் வரை மழை பெய்யவில்லை. ஆனால்மதியத்துக்கு பிறகுகோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கோவை மாநகரில் ஒரு சில இடங்களிலும்,புறநகர் பகுதியில்வடவள்ளி,துடியலூர்,பெரியநாயக்கன்பாளையம்,தொண்டாமுத்தூர்மற்றும் பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம்,சூலூர்ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.மேற்கு தொடர்ச்சிமலையையொட்டி உள்ளகிராமப்பகுதிகளிலும்தொடர்ந்து மழை பெய்தது.

இதன் காரணமாகநொய்யல்ஆற்றில்மழைநீர்பெருக்கெடுத்து ஓடியது. மேலும்உக்கடம்பெரிய குளம், குறிச்சி குளம், வெள்ளலூர்குளம், பேரூர்குளம் உள்பட கோவையை சுற்றியுள்ளஅனைத்து குளங்களிலும்நீர்வரத்துஅதிகரித்துள்ளது.சித்திரைச்சாவடிஅணைக்கட்டு பகுதியில்மழைநீர்பெருக்கெடுத்து ஓடுகிறது.கோவை பட்டணம்பகுதியில்நொய்யல்ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோவை மாநகரில் தொடர்ந்து பெய்யும்மழை காரணமாகஅவினாசி மேம்பாலம்,வடகோவைமேம்பாலம்,புலியகுளம்உள்பட பல்வேறுபகுதிகளில்மழைநீர்தேங்கியது. கோவை மாநகர் மற்றும் புறநகரில்லேசாக பெய்தமழையினால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின்நீர்பிடிப்புபகுதியில்நேற்றுமுன்தினம்19மி.மீட்டரும், அடிவாரத்தில் 8மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது. அணையின் நீர்மட்டம் 44½ அடியாக இருந்தது. தினமும் 10 கோடியே 90 லட்சம்லிட்டர் தண்ணீர்எடுக்கப்பட்டுபொதுமக்களுக்குவினியோகிக்கப்பட்டு வருகிறது.

பருவமழை குறித்து விவசாயிகள்கூறியதாவது:- கோவையில் பெய்து வரும் மழைஅனைத்து பயிர்களுக்கும்ஏற்றது. தற்போது சோளம், அவரை மற்றும்பயிறுவகைகளை விவசாயிகள் விதைத்துள்ளனர். குளங்களில் போதுமான தண்ணீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம்உயர்ந்திருப்பதால்விவசாயத்துக்கு இந்தஆண்டு தண்ணீர் பற்றாக்குறைஇருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று காலையில் வானம்மேகமூட்டத்துடன்காணப்பட்டது. மதியம்அவ்வப்போதுலேசான மழை பெய்தது. இதன் காரணமாக ஊட்டியில் குளிர் அதிகமாக இருந்தது. இதனால் வழக்கத்தைவிடசுற்றுலா பயணிகளின்வருகை நேற்று குறைந்தது. குன்னூர் மற்றும்சுற்றுவட்டார பகுதிகளில்பலத்த மழை பெய்தது.மழைநீர்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. காலையில்வேலைக்கு சென்றவர்கள்மழையில் நனைந்தபடியேசென்றதை காணமுடிந்தது.

கோத்தகிரிமற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சுமார் 7மணியளவில்கோத்தகிரிமி‌‌ஷன்காம்பவுண்ட்சாலையின் குறுக்கே கற்பூர மரம் ஒன்று விழுந்தது. இதனால்கோத்தகிரி-கூக்கல்தொரை,தாந்தநாடுசெல்லும் சாலையில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்துகூக்கல்தொரை,கப்பட்டி,கன்னேரிமுக்கு,தாந்தநாடு, குண்டாடா, உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும்வாகனங்கள்கோத்தகிரிபஸ்நிலையம்வழியாக மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

மஞ்சூர்மற்றும் அதன்சுற்றுபுறபகுதிகளில் நேற்று பகல் முழுவதும்கடும்பனிமூட்டத்துடன் இடைவிடாமல் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். குந்தா,மஞ்சூர்,எமரால்டு,அவலாஞ்சி,தாய்சோலை,கேரிங்டன்,கோரகுந்தா,எடக்காடு,அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இந்த மழையால்மஞ்சூர்-கிண்ணக்கொரைசாலையில்மீக்கேரிதிட்டுமுனீஸ்வரர்கோவில்அருகே ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்தநெடுஞ்சாலை துறையினர் மற்றும் பொதுமக்கள்அந்த சாலையில்விழுந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால்மஞ்சூர்-கிண்ணக்கொரைசாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

ஊட்டி -1.5, குந்தா -8, அவலாஞ்சி -6, எமரால்டு -6, கெத்தை -5, குன்னூர் -17, பர்லியார் -2, கேத்தி -9, கோத்தகிரி -14, கோடநாடு -13.

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் போலீசாருக்கு உடல் இணை கேமராக்கள் - மாநகர ஆணையர் சுமித் சரண் தகவல்
கோவையில் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு தங்கள் சீருடையில் இணைத்து பயன்படுத்தும் வகையில் உடல் இணை கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
2. கோவை மாநகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
கோவை மாநகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
3. விமானங்களில் கோவை வந்த 432 பேருக்கு பரிசோதனை
விமானங்கள் மூலம் கோவை வந்த 432 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
4. கோவையில் பரபரப்பு: 2 கோவில்கள் முன்பு இறைச்சியை வீசிய என்ஜினீயர் கைது சம்பவம் நடந்து 6 மணி நேரத்தில் போலீசார் நடவடிக்கை
கோவையில், 2 கோவில்கள் முன்பு இறைச்சி வீசிய என்ஜினீயரை சம்பவம் நடந்த 6 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
5. கோவையில் 11 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
கோவையில் 11 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.