25,000 கி.மீ அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தப்படும் - நிதியமைச்சர்
மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
புதுடெல்லி,
2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
- போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
- நடப்பு நிதியாண்டில் 25,000 கி.மீ அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தில் 3 ஆண்டுகளில் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
- மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம்
- உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரெயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் திட்டம் கொண்டு வரப்படும்.
- கதி சக்தி திட்டத்தின் கீழ் 3 ஆண்டுக்ளில் 100 புதிய சரக்கு முனையங்கள் அமைக்க திட்டம்
- ரூ. 44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
- நீர்ப்பாசன இணைப்பு திட்டம் ரூ.46, 605 கொடி செலவில் நிறைவேற்றப்படும்.
- டிரோன்கள் மூலம் பயிர்களை ஆய்வு செய்ய திட்டம். நாடு முழுவதும் ரசாயனம் இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்
Related Tags :
Next Story