பத்மாவத் படத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு


பத்மாவத் படத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்  மீண்டும் மறுப்பு
x
தினத்தந்தி 23 Jan 2018 6:32 AM GMT (Updated: 2018-01-23T12:02:33+05:30)

ராஜஸ்தான், மத்திய பிரதேச அரசுகள் பத்மாவத் படத்துக்கு தடை விதிக்க கோரியதை சுப்ரீம் நிராகரித்துவிட்டது. #Padmaavat #SupremeCourt

புதுடெல்லி

நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி திரைப்படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அந்த படம் ‘பத்மாவத்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டும், காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து தணிக்கை குழுவினர்   படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கி அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த படம் வருகிற 25-ந்தேதி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான், குஜராத், அரியானா, மத்திய பிரதேசம் ஆகிய பா.ஜனதா ஆளும் 4 மாநிலங்கள் ‘பத்மாவத்’ படத்துக்கு தடை விதித்தது. சுப்ரீம்கோர்ட்டு இந்த தடையை நீக்கி இருந்தது.

பத்மாவத் படத்துக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என கூறி மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. படத்தை வெளியிட வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. ஆன்னா ராஜஸ்தான், மத்திய பிரதேச அரசுகள் தடை விதிக்க கோரிய மனௌவை சுப்ரீம்  நிராகரித்துவிட்டது.

 உத்தர பிரதேச மாநிலத்தில் ‘பத்மாவத்’ படத்துக்கு எதிராக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கர்னி சேனா அமைப்பினர் ‘பத்மாவத்’ படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நொய்டாவிலும் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கைகளில் கம்புகளை வைத்துக் கொண்டு குர்கான் சாலையில் வாகனங்களை மறித்து அடித்து நொறுக்கினார்கள். 

 இந்நிலையில் உ.பி., மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டரை வன்முறை கும்பல் சூறையாடியது.தியேட்டரின் டிக்கெட் கவுன்டர்களில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் கண்ணாடி அறைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story