போதைப்பொருள் வழக்கில் நடிகர் கைது - 14 நாட்கள் நீதிமன்ற காவல்


போதைப்பொருள் வழக்கில் நடிகர் கைது - 14 நாட்கள் நீதிமன்ற காவல்
x
தினத்தந்தி 1 Sep 2021 1:34 PM GMT (Updated: 2021-09-01T19:04:25+05:30)

போதைப்பொருள் வழக்கில் இந்தி நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தி திரைத்துறையில் நடிகராக செயல்பட்டு வருபவர் அர்மன் கோலி. 49 வயதான இவர் நடிகர் சல்மான் கான் படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

இதற்கிடையில், மும்பையில் உள்ள நடிகர் அர்மன் கோலி வீட்டில் கடந்த 28-ம் தேதி போதைப்பொருள் தடுப்பு முகமை அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அர்மனி கோலி வீட்டில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, அர்மன் கோலி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நடிகர் கோலி இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட் நடிகர் கோலியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, நடிகர் அர்மன் கோலி சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story