சீரடி சாய்பாபா கோவிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன்


சீரடி சாய்பாபா கோவிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன்
x
தினத்தந்தி 19 Oct 2021 11:49 AM GMT (Updated: 2021-10-19T17:19:31+05:30)

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று சாமிகும்பிட்டனர்.

மும்பை

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் விரைவில் ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்டப் படங்களும் விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் விரைவில் வெளியாகவிருக்கின்றன.வரும் தீபாவளிக்கு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ படம் வெளியாகிறது.

இந்த நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மராட்டிய  மாநிலத்தில் உள்ள  உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மகாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் விக்னேஷ் சிவன்.Next Story