ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங் தேர்வு


ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங் தேர்வு
x
தினத்தந்தி 13 April 2019 10:40 AM GMT (Updated: 2019-04-13T16:10:04+05:30)

ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

மும்பை,

ஐ.பி.எல். போட்டியின் இன்றைய 27வது ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது.  இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சித்தேஷ் நீக்கப்பட்டு உள்ளார்.  அந்த அணியில் வேறு மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

இதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் காயத்தினால் ஸ்டோக்ஸ் வெளியேறியுள்ளார்.  ரியான் பராக்கிற்கு பதிலாக கிருஷ்ணப்பா கவுதம் சேர்க்கப்பட்டு உள்ளார்.  லையாம் லிவிங்ஸ்டோன் ஐ.பி.எல். போட்டிக்கான தனது முதல் ஆட்டத்தில் விளையாடுகிறார்.

இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா மற்றும் டி காக் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுகின்றனர்.

Next Story