இந்தியா-இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணையில் மாற்றம்


இந்தியா-இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணையில் மாற்றம்
x
தினத்தந்தி 15 Feb 2022 12:37 PM GMT (Updated: 2022-02-15T18:07:13+05:30)

இந்தியா-இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.புனே,

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என பி.சி.சி.ஐ. இன்று அறிவித்து உள்ளது.

இதன்படி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது, வருகிற 24ந்தேதி தொடங்கி நடைபெறும்.  இதனை தொடர்ந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும்.  டி20 போட்டிகளில் முதல் போட்டி லக்னோவிலும், அடுத்த 2 போட்டிகள் தரம்சாலாவிலும் நடைபெறும் என பி.சி.சி.ஐ. தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, முதல் டெஸ்ட் போட்டியானது, மொகாலியில் வரும் மார்ச் 4ந்தேதி தொடங்கி 8ந்தேதி வரை நடைபெறும்.  2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வரும் மார்ச் 12ந்தேதி தொடங்கி 16ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளது.

இதற்கு முன்பு, இந்தியா மற்றும் இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது, பிப்ரவரி 25ந்தேதி பெங்களூருவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  டி20 போட்டியானது, வருகிற மார்ச் 13ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


Next Story