டி20 போட்டிகளில் 100 வெற்றியை பெற்ற 2வது அணி இந்தியா


டி20 போட்டிகளில் 100 வெற்றியை பெற்ற 2வது அணி இந்தியா
x
தினத்தந்தி 18 Feb 2022 8:32 PM GMT (Updated: 18 Feb 2022 8:32 PM GMT)

பாகிஸ்தானுக்கு அடுத்து டி20 போட்டிகளில் 100 வெற்றியை பெற்ற 2வது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.


கொல்கத்தா,


இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.  187 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்களை எடுத்தது.  இதனால், இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி உள்ளது.

இந்த வெற்றியால், பாகிஸ்தானுக்கு அடுத்து டி20 போட்டிகளில் 100வது வெற்றியை பெற்ற 2வது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இதுவரை பாகிஸ்தான் அணியே, 100க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற சாதனையை படைத்து இருந்தது.  அந்த அணி 118 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  ரோகித் தலைமையிலான இந்திய அணி பெற்ற வெற்றியால் 100க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற 2வது அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.


Next Story