அக்சர், லலித் அதிரடி : மும்பையை வீழ்த்தி டெல்லி அசத்தல் வெற்றி


Image Courtesy: IPL
x
Image Courtesy: IPL
தினத்தந்தி 27 March 2022 2:13 PM GMT (Updated: 27 March 2022 2:13 PM GMT)

அக்சர், லலித் அதிரடியால் மும்பையை வீழ்த்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றிபெற்றது.

மும்பை,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன், 2-வது லீக் ஆட்டம் மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். 

இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய அல்மோத்பிரீத் சிங்(8), திலக் வர்மா(22), பொல்லார்ட்(3) அடுத்தடுத்து வெளியேறினர். 

ஆனால், சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா மற்றும் டிம் செல்ஃபெர்ட் களமிறங்கினர். பிரித்வி ஷா 38 ரன்னிலும், டிம் 21 ரன்னிலும் வெளியேறினர். அடுத்துவந்த மன்பிரீத் சிங் (0) ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், ரொவ்மென் பவுல் (0) ரன் எதுவும் எடுக்காமலும், ஷர்துல் தாகூர் 22 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

ஒரு கட்டத்தில் டெல்லி அணி 13.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் லலித் யாதவுடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரு வீரர்களும் சிக்சர்களை பறக்கவிட்டனர். இறுதியில் டெல்லி அணி 18.2 ஓவரில் 179 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. 

சிறப்பாக ஆடிய லலித் யாதவ் 38 பந்துகளில் 2 சிக்சர் உள்பட 48 ரன்கள் குவித்தார். அதேபோல், அக்சர் பட்டேல் 17 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 38 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இதன் மூலம் மும்பை இந்தியன்சை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி பெற்றது.

Next Story