ஐ.பி.எல் 2022 : முதல் வெற்றியை பெறுவது யார்? சென்னை -லக்னோ அணிகள் இன்று மோதல்


ஐ.பி.எல் 2022 : முதல் வெற்றியை பெறுவது யார்? சென்னை -லக்னோ அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 31 March 2022 10:39 AM GMT (Updated: 2022-03-31T16:09:10+05:30)

இன்று நடைபெறும் 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் பணிந்தது.

தனிமைப்படுத்துதல் விதிமுறை காரணமாக முதல் ஆட்டத்தில் வெளியில் இருந்த ஆல்-ரவுண்டர் மொயீன் அலி இன்றைய ஆட்டத்தில் களம் காண உள்ளார். இது சென்னை அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும்.

அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சிடம் தோல்வியை தழுவியது. கேப்டன் ராகுல், டி காக் உள்பட முன்னணி வீரர்கள் சொதப்பிய நிலையில் தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி அரைசதம் அடித்து அணியை காப்பாற்றினர். இதில் லக்னோ நிர்ணயித்த 159 ரன்கள் இலக்கை குஜராத் அணி 2 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. தொடக்க வீரர்கள் நிலைத்து நின்று ஆடும்பட்சத்தில், லக்னோ அபாயகரமான அணியாக மாறி விடும்.

இரு அணிகளுமே வெற்றிக்கணக்கை தொடங்கும் தீவிரத்துடன் இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது 


Next Story