ஐபிஎல் 2022 : கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று மோதல்


ஐபிஎல் 2022 : கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 6 April 2022 8:37 AM GMT (Updated: 6 April 2022 8:37 AM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன .

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன .

விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்த மும்பை அணி இந்த போட்டியில் முதல் வெற்றி பெறும் முனைப்புடன் களம் காணும் .அதே நேரத்தில் 3 போட்டியில் 2 வெற்றிகளை பெற்ற கொல்கத்தா அணி 3-வது வெற்றி பெறும்  முனைப்புடன் களம் இறங்கும் .இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது .

இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது  
 

Next Story