ஐபிஎல் : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 14 April 2022 1:42 PM GMT (Updated: 2022-04-14T19:12:45+05:30)

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது

மும்பை,

15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 24-வது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டேல் மைதானத்தில்நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். இதனால் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story