கேப்டன் பதவியிலிருந்து இங்கிலாந்தின் ஜோ ரூட் விலகல்


கேப்டன் பதவியிலிருந்து இங்கிலாந்தின் ஜோ ரூட் விலகல்
x
தினத்தந்தி 15 April 2022 8:52 AM GMT (Updated: 2022-04-15T14:22:03+05:30)

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜோ ரூட் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்த நிலையில், ஜோ ரூட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

ஆஷஸ் டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் பறிகொடுத்த  இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-1 என்ற கணக்கில் இழந்தது. இங்கிலாந்தின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன்களில் ஒருவராக ஜோ ரூட் இருந்தார். ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து அணி இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. 

Next Story