ஐபிஎல் : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா அதிரடி அரைசதம்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 1 May 2022 11:14 AM GMT (Updated: 1 May 2022 11:14 AM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன்  கே எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் ,குயின்டன் டி காக் களமிறங்கினர் .

இருவரும் தொடக்கம் முதல் அதிரடியாக ரன்களை சேர்த்தனர் .அணியின் ஸ்கோர் 41 ரன்னாக இருந்தபோது டி காக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார் .

பின்னர் வந்த தீபக் ஹூடா ராகுலுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார் .
ஒரு புறம் கே. எல்.ராகுல் ,மறுபுறம் ஹூடா என இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் .

ஹூடா 32 பந்துகளில் ,கே.எல் .ராகுல் 35 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர் 

Next Story