தூத்துக்குடியில் ரூ.20 லட்சம் மோசடி செய்த நிதிநிறுவன மேலாளர் கைது


தூத்துக்குடியில் ரூ.20 லட்சம் மோசடி செய்த நிதிநிறுவன மேலாளர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2016 7:45 PM GMT (Updated: 2016-12-13T21:15:31+05:30)

தூத்துக்குடியில், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மோசடி செய்த, அந்தநறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மோசடி செய்த, அந்தநறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

நிதிநிறுவனம்

தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விக்னேஷ்வரன்(வயது 45). இவர் தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் அருகே நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் இருசக்கர வாகனங்களுக்கு கடன் கொடுக்கப்பட்டு வந்தது. இங்கு கிருஷ்ணராஜபுரம் 6–வது தெருவை சேர்ந்த நடராஜன் மகன் மாரியப்பன்(33) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.

ரூ.20 லட்சம் மோசடி

இந்த நிறுவனத்தில், கடனை திருப்பி செலுத்தியவர்கள் சிலர் வாகனங்களுக்கான ஆவணங்களை திரும்ப பெறாமல் இருந்தனர். இந்த ஆவணங்களை பயன்படுத்தி, போலியாக 25 புதிய கணக்குகளை மாரியப்பன் உருவாக்கி உள்ளார். அதன் மூலம், ரூ.20 லட்சம் பணத்தை கையாடல் செய்து அவர் மோசடி செய்து உள்ளார். சமீபத்தில் நிறுவனத்தின் வரவு–செலவு கணக்குகளை ஆய்வு செய்த விக்னேஷ்வரன் இந்த மோசடியை கண்டுபிடித்துள்ளார்.

மேலாளர் கைது


இது குறித்து விக்னேஷ்வரன் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதை அறிந்த மாரியப்பன் தலைமறைவாகி விட்டார். கோவை வெத்தலைபுரி பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story