ஏரியூரில் மாணவிகள் விடுதியில் நுழைந்த மான் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

ஏரியூரில் மாணவிகள் விடுதியில் நுழைந்த மான் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 14 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-15T02:36:52+05:30)

ஏரியூரில் மாணவிகள் விடுதியில் நுழைந்த மான் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் நேற்று ஒரு மான் வழி தவறி வந்தது. இந்த மானை அந்த பகுதியில் இருந்த நாய்கள் துரத்தின. இதனால் ஓட்டமெடுத்த அந்த மான் அந்த பகுதியில் உள்ள மாணவிகள் விடுதிக்குள் புகுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த அக்கம், பக்கத்தினர் அந்த மானை பிடித்தனர். பின்னர் இதுபற்றி பென்னாகரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் அந்த மான் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மான் மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

Next Story