வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆய்வு


வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-18T03:07:38+05:30)

வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

புதுக்கோட்டை,

வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்ட டி.கே.எம். 13 என்ற புதிய ரக நெல்லை கந்தர்வக்கோட்டை மற்றும் அன்னவாசல் வட்டாரத்தில் மொத்தம் 15 ஏக்கர் அளவில் செயல் விளக்கத்திடல் அமைத்து பரவலாக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வீரடிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் தனது வயலில் டி.கே.எம்-13 என்ற நெல்லை 2 ஏக்கரில் சாகுபடி செய்து உள்ளார். இந்த வயலை வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேலை, உதவி பேராசிரியர் கதிரவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை விவசாயி கிருஷ்ணனிடம், இந்த ரகம் 130 நாட்கள் வயதுடையது. இலைச்சுருட்டு புழு, தண்டு துளைப்பான், குலைநோய் மற்றும் புகையான் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது. மேலும் இது ஆந்திர ரகமான பி.பி.டி 5204 (டீலக்ஸ் பொன்னி) விட 10 சதவீதம் கூடுதல் மகசூல் தரும். ஒரு எக்டருக்கு 6 ஆயிரம் கிலோ மகசூல் தரவல்லது என்றார்.

Next Story