போலீஸ் சீருடையில் மக்களிடம் வழிப்பறியா? மேல்மருவத்தூரில் போலி துப்பாக்கி, கத்தியுடன் 6 பேர் கைது


போலீஸ் சீருடையில் மக்களிடம் வழிப்பறியா? மேல்மருவத்தூரில் போலி துப்பாக்கி, கத்தியுடன் 6 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2016 10:15 PM GMT (Updated: 19 Dec 2016 8:53 PM GMT)

மேல்மருவத்தூரில் போலி துப்பாக்கி மற்றும் கத்தியுடன் காரில் வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீஸ் சீருடையில் மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். 6 பேர் கைது காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் போல

மதுராந்தகம்,

மேல்மருவத்தூரில் போலி துப்பாக்கி மற்றும் கத்தியுடன் காரில் வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீஸ் சீருடையில் மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

6 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்குள்ள வந்தவாசி சாலையில் அவர்கள் சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு கார் நிற்காமல் வேகமாக சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரை விரட்டிப்பிடித்தனர். அந்த காரில் போலி ‘நம்பர் பிளேட்’ பயன்படுத்தப்பட்டு இருந்தது. காரின் முன்புறம் போலீஸ் எனவும் எழுதப்பட்டு இருந்தது. இதனையடுத்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து காரில் இருந்த வேலூரைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 27), ரகு (24), எழில்பாபு (40), சிவா, வேலூர் மாவட்டம் சேத்துப்பட்டைச் சேர்ந்த ஆதிமூலம் (42), ஆரணியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் (35) ஆகிய 6 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர்.

போலீஸ் சீருடை

மேலும் காரில் இருந்த ஒரு பையில் சில போலீஸ் சீருடைகளும், கத்தி, காரின் முன்புறம் கொடி கட்ட பயன்படும் கம்பி மற்றும் போலி துப்பாக்கியும் இருந்தன. எனவே பிடிபட்ட 6 பேரும் போலீஸ் சீருடை அணிந்துகொண்டு மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த காரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு கார் போலீசை பார்த்ததும் நிற்காமல் வேகமாக சென்று விட்டது. இந்த காரை, பிடிபட்டவர்களின் கூட்டாளி நரேஷ் என்பவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது. அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் தான் அவர்களை பற்றிய முழுவிவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story