சென்னையில் கடலோர பாதுகாப்புபடை வீரர்களின் சாகச நிகழ்ச்சி மாணவர்கள் கண்டு ரசித்தனர்


சென்னையில் கடலோர பாதுகாப்புபடை வீரர்களின் சாகச நிகழ்ச்சி மாணவர்கள் கண்டு ரசித்தனர்
x
தினத்தந்தி 5 Jan 2017 9:11 PM GMT (Updated: 5 Jan 2017 9:11 PM GMT)

சென்னை துறைமுகத்துக்கு பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான சாகர் மற்றும் வீரத் கப்பல்கள் வந்தன.

சென்னை,

இந்திய கடலோர பாதுகாப்பு படையின் 40-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை துறைமுகத்துக்கு பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான சாகர் மற்றும் வீரத் கப்பல்கள் வந்தன. இந்த கப்பல்களில் பணியாற்றும் கடலோர பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட சென்னையைச் சேர்ந்த 1,208 பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் கப்பலின் மேல்தளத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நிகழ்த்திய சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

பின்னர் மாணவர்கள் கப்பல்களுக்கு உள்ளே அழைத்து செல்லப்பட்டனர். கப்பலில் உள்ள மாலுமி அறைக்கு அழைத்து செல்லப்பட்டு கப்பலை எப்படி பாதுகாப்பாக இயக்குவது என்பது குறித்தும், கப்பலில் ஹெலிகாப்டர் நிறுத்தும் அறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போர்க்கருவிகள் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வரும் காலத்தில் மாணவர்களும் கடலோர பாதுகாப்பு படையில் சேர்ந்து நாட்டை பலப்படுத்த முன்வரவேண்டும் என்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் மாணவர்களிடம் எடுத்து கூறினார்கள். 

Next Story