வேளாண் அதிகாரி பணி வாய்ப்பு
வேளாண் ஆராய்ச்சியாளர் தேர்வு வாரியம் சுருக்கமாக ஏ.எஸ்.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. புது டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும்
இந்த அமைப்பு வேளாண் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் ஏற்படும் உயர் அதிகாரி பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது டெல்லி, புவனேஸ்வர், ராஜஸ்தான், கொல்கத்தா, உத்தரபிரதேசம், கோவா உள்ளிட்ட இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி மையங்களில் டைரக்டர், டெபுடி டைரக்டர், புராஜக்ட் டைரக்டர், ஜாயின்ட் டைரக்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 31 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு 31-1-2017-ந் தேதியில் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வேளாண் அறிவியல் மற்றும் அறிவியல் படிப்புகளில் முதுநிலை பட்டத்துடன், ஆராய்ச்சிப் படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பலாம். இதற்கான விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 31-1-2017-ந் தேதியாகும்.
இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி பல்வேறு அதிகாரி பணிகளுக்கு 21 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வேளாண்மை முனைவர் பட்டம் பெற்றவர்கள், நேச்சுரல் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், கார்ப் இம்ப்ரூவ்மென்ட், கார்ப் புரொடக்சன், பிளான்ட் பயோடெக்னாலஜி, உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்பு படித்தவர் களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான சான்றுகள் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் Agricultural Scientists Recruitment Board (ASRB), New Delhi என்ற முகவரிக்கு 8-2-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை www.asrb.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story