புதுவையில் மதுபானங்கள் விலை திடீர் உயர்வு


புதுவையில் மதுபானங்கள் விலை திடீர் உயர்வு
x
தினத்தந்தி 15 Feb 2017 4:00 AM IST (Updated: 15 Feb 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மதுபானங்களின் விலை திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது.

மதுபானங்கள் மீதான வரி உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான மதுவகைகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மதுப்பிரியர்கள் அதிக அளவில் புதுவைக்கு வந்து மது பானத்தை விரும்பி அருந்துகின்றனர். இதனால் புதுவை அரசின் வருவாயில் மது விற்பனை முக்கிய இடம் பிடித்துள்ளது.

புதுவையில் அரசு மற்றும் தனியார் மூலம் 450க்கும் மேற்பட்ட மது விற்பனை கடைகள் உள்ளன.

மதுபானங்களுக்கு விற்பனை வரிக்கு பதிலாக காலால் வரி, கூடுதல் கலால்வரி, இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்தநிலையில் மதுபானங்கள் மீதான கூடுதல் கலால்வரி தற்போது 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுபானங்கள் விலை உயர்ந்துள்ளது. மாதம் ரூ. 5 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும்.

விலை உயர்வு

கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கூடுதல் கலால்வரி உயர்த்தப்பட்ட பின்னர் தற்போதுதான் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானம், வெளிநாட்டு உற்பத்தி மதுபானங்கள், இறக்குமதி செய்யப்பட்ட மதுபான வகைகள் அடங்கும்.

இந்த கூடுதல் கலால்வரி உயர்வின் மூலம் மாதம் ரூ.5 கோடி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். பீர் வகைகளுக்கு கூடுதல் கலால் வரி உயர்வின் மூலம் ஒரு பாட்டிலுக்கு ரூ.1 முதல் ரூ.2 வரை அதிகரிக்கும்.

விலை விவரம்

உயர்த்தப்பட்ட விலை விவரம் வருமாறு:–

1 பல்க் ஏற்கனவே

லிட்டர் விலை உள்ள கூடுதல் உயர்த்தப்பட்டுள்ள

( ரூபாயில்) கலால்வரி கூடுதல் கலால் வரி

0–399 ரூ.30 ரூ.8

400–449 ரூ.40 ரூ.10

450–499 ரூ.50 ரூ.13

500–549 ரூ.52 ரூ.13

550–599 ரூ.55 ரூ.14

600–699 ரூ.61 ரூ.15

700–799 ரூ.66 ரூ.17

800–899 ரூ.71 ரூ.18

900–999 ரூ.76 ரூ.19

1000–1099 ரூ.81 ரூ.20

1100–1399 ரூ.91 ரூ.23

1400–1699 ரூ.107 ரூ.27

1700–1999 ரூ.122 ரூ.31

2ஆயிரத்திற்கு ரூ.181 ரூ.45


Next Story