கொசூர் அருகே பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


கொசூர் அருகே பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 8 March 2017 9:10 PM GMT (Updated: 8 March 2017 9:10 PM GMT)

கொசூர் அருகே பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தரகம்பட்டி,

கொசூர் ஊராட்சி கொசூர் கஸ்பா என்ற கிராமம் 300 ஆண்டுகளுக்கு முன்பு அக்ஹரகாரப்பட்டி என்னும் கிராமமாக இருந்தது. இதில் பிராமணர்கள் அதிக அளவில் குடியிருந்து வந்தனர்.

அவர்களால் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவில் நிறுவப்பட்டது. நாளடைவில் அக்கோவில் பராமரிப்பு இல்லாமல் சிதிலம் அடைந்த நிலையில் இருந்தது. பெரும்பாலான மக்கள் இந்த பெருமாள் கோவிலை சிவன் கோவில் என்று வழிபட்டு வந்தனர். பின்னர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி கிராம மக்களால் கருவறைக்குள் சென்று பார்த்தபோது, பெருமாள் சிலை இருந்தது. அன்று முதல் கொசூர் கிராம மக்கள் இந்த பெருமாள் சிலையை வழிபட்டு வந்தனர்.

கும்பாபிஷேகம்

இந்த நிலையில் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. தேவர்மலை ஸ்ரீநரசிங்க பெருமாள் கோவில் அர்ச்சகர் பாலாஜி அய்யங்கார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விநாயகர், பாலமுருகன் கோவில்

இதேபோல் வரவணை ஊராட்சி சின்னாண்டிபட்டியில் செல்வ விநாயகர், பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பின்னர் பல்வேறு பூஜைகளுடன் முதல் மற்றும் இரண்டாம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை காணியாளம்பட்டி, காணிகளத்தூர், சின்னாண்டிபட்டி, சேங்கல், சுக்காம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். 

Next Story